மேலும் செய்திகள்
ரூ.9.90 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மைய கட்டடம்
19-Feb-2026
சூளகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த ஒசஹள்ளி பஞ்., உட்பட்ட கீழ் மொரசுப்பட்டி கிராமத்தில், புதிய ரேஷன் கடை கட்ட, மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதையேற்று, வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, பல்நோக்கு கட்டடம் கட்டும் பணிக்காக, 9.90 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இப்பணியை, வேப்பனஹள்ளி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., முனுசாமி, பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பாபு வெங்கடாசலம், பாலசுப்பிரமணியம், ஓட்டுனர் அணி ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட பொருளாளர் மல்லையன் உட்பட பலர் பங்கேற்றனர்.
19-Feb-2026