மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம் : உலக உணவு தினம்
16-Oct-2024
அரசு கல்லுாரிகளில் சத்துணவு வழங்க'உலக உணவு நாள்' விழாவில் கோரிக்கைகிருஷ்ணகிரி, அக். 17- கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லுாரியில் உலக உணவு நாள் விழா நடந்தது.கல்லுாரி முதல்வர் (பொ) ரவி தலைமை வகித்தார். பேராசிரியர் விமல்ராஜ் வரவேற்றார். நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாநில பொதுச்செயலாளரும் குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளருமான சந்திரமோகன் பேசுகையில், ''தமிழகத்தில், அரசு பள்ளிகளில் மதிய சத்துணவு திட்டத்தை போல், கல்லுாரிகளிலும் மதிய சத்துணவு திட்டத்தை கொண்டு வர உலக உணவு நாள் தினமான இன்று, தமிழக முதல்வருக்கு கோரிக்கையாக வைக்கிறோம்.மேலும், கல்லுாரிகளில் சீரான குடிநீர் மற்றும் கூடுதல் கழிப்பிட வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். மாணவர்கள் கல்வி கற்கும்போது, ஏழை மாணவர்கள் பட்டினியோடு கல்வி பயில்வதை தவிர்க்கும் வகையில், அரசு இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்,'' என்றார்.நுகர்வோர் சங்க நிர்வாகிகள் மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். கல்லுாரி உதவி பேராசிரியர் சிவக்குமார் நன்றி கூறினார்.
16-Oct-2024