மேலும் செய்திகள்
பா.ஜ., சார்பில் தேசிய கொடி பேரணி
16-Aug-2025
கெலமங்கலம், கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், 1.50 கோடி ரூபாய் மதிப்பில் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு, 65 லட்சம் ரூபாய் மதிப்பில், மக்களுக்கான சுகாதார மையம் கட்ட, 15வது நிதிக்குழு திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், கெலமங்கலம் சுல்தான்பேட்டையில், 50 லட்சம் ரூபாய் மதிப்பில் துணை சுகாதார நிலையம் அமைக்க நிதி வழங்கப்பட்டுள்ளது.இதற்கான பணிகள் துவக்க விழா நேற்று நடந்தது. கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார், டவுன் பஞ்., தலைவர் தேவராஜ் முன்னிலை வகித்தனர். தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் தலைமை வகித்து, பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். டாக்டர்கள், கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
16-Aug-2025