உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தீபாவளி பண்டிகை ரூ.3 கோடிக்கு மது விற்பனை

தீபாவளி பண்டிகை ரூ.3 கோடிக்கு மது விற்பனை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும், 117 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் நாள்தோறும், 1.50 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் அதிகளவில் மது விற்பனை நடக்கும்.நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. மது பிரியர்கள் பலரும், 30 மாலை முதலே மது பாட்டில்களை வாங்க தொடங்கினார்கள். இதனால் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. நேற்று முன்தினமும் வழக்கத்தை விட மது விற்பனை அதிகமாக இருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும், 3 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானது. இது குறித்து டாஸ்மாக் ஊழியர்கள் சிலர் கூறுகையில்,'வழக்கத்தை விட தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிக விற்பனை நடந்துள்ளது. தொடர்ந்து 4 நாள் விடுமுறை என்பதால் நாளை வரை மது விற்பனை அதிகமாக இருக்கும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை