உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / லாரி மோதி டிரைவர் பலி

லாரி மோதி டிரைவர் பலி

பனமரத்துப்பட்டி, கரூரில் இருந்து சிமென்ட் தயாரிக்க பயன்படும் மூலப்பொருள் பாரம் ஏற்றிய சரக்கு லாரி, சேலம்-நாமக்கல் நெடுஞ்சாலை, தாசநாயக்கன்பட்டி பாலத்தில், பழுதாகி நேற்று அதிகாலையில் நின்றது. அப்போது, கரூரில் இருந்து எம்.சாண்ட் பாரம் ஏற்றிய லாரி காலை, 5:30 மணிக்கு சேலம் நோக்கி வந்தது. தாசநாயக்கன்பட்டி பாலத்தில் பழுதாகி நின்ற லாரியின் பின்புறத்தில், எம்.சாண்ட் பாரம் ஏற்றி வந்த லாரி மோதியது.இதில், எம்.சாண்ட் லாரியை ஓட்டிவந்த சேலம், காடையாம்பட்டியை சேர்ந்த டிரைவர் ரவி, 52, படுகாயமடைந்து உயிரிழந்தார். விபத்து குறித்து மல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை