விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு ; விவசாயிகள் ஆலோசனை கூட்டம்
ஓசூர்: ஓசூரில், விமான நிலையத்திற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, அடுத்த கட்ட போராட்டம் குறித்து, விவசாயிகள் ஆலோசனை நடத்தினர்.தமிழக எல்லையான ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கும் பணிகளை, தமிழக தொழில்துறை மேம்பாட்டு கழகம் தீவிரமாக செய்து வருகிறது. கடந்த ஆக., 22ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த உயர்-மட்ட கூட்டத்தில், முத்தாலி மற்றும் அதை சுற்-றியுள்ள இடங்களில், விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, அரசு நிலங்களின் அதிகமான பரப்பளவு, பட்டா நிலங்களின் விலை, தேசிய மற்றும் மாநில, மாவட்ட சாலைகள் போன்ற பல்வேறு சாதகங்கள் இருப்பதால், முத்-தாலி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் தான், விமான நிலையம் அமைக்க உகந்ததாக இருக்கும் என, முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்காக, ஓசூர் தாலுகாவிற்கு உட்பட்ட பலவ-னப்பள்ளி, முத்தாலி, அடவனப்பள்ளி, தாசப்-பள்ளி, பெத்த முத்தாலி, அட்டூர், அலேநத்தம், காருப்பள்ளி, நந்திமங்கலம், சூடகொண்டப்பள்ளி, சூளகிரி தாலுகாவிற்கு உட்பட்ட வெங்கடேசபுரம், மிடுதேப்பள்ளி ஆகிய, 11 கிராமங்களில், அரசு புறம்போக்கு நிலங்கள், 342 ஹெக்டேரும், விவ-சாயம் செய்யாத பட்டா நிலங்கள், விவசாய நிலங்கள் மொத்தம், 864 ஹெக்டேரும் என மொத்தம், 1,206 ஹெக்டேர் (2,980 ஏக்கர்) நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.விவசாய நிலங்களை விமான நிலையத்திற்காக கையகப்படுத்த கூடாது எனக்கூறி, 11 கிராமங்க-ளிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல தலைமு-றையாக விவசாயம் செய்யும் நிலங்களை, எங்கள் உயிரே போனாலும் வழங்க மாட்டோம் எனக்கூறி எதிர்த்து வரும் விவசாயிகள், 200க்கும் மேற்பட்டோர், அடுத்த கட்ட போராட்டம் நடத்து-வது குறித்து, ஓசூர் அருகே அடவனப்பள்ளியில் உள்ள சென்றாய சுவாமி கோவிலில், நேற்று காலை ஆலோசனை கூட்டம் நடத்தினர்.தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க, மேற்கு மாவட்ட செயலாளர் கணேஷ்ரெட்டி, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி உட்பட பலர், கூட்டத்தில் பங்கேற்று விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.