உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பைக் மோதி பெண் காவலர் உயிரிழப்பு

பைக் மோதி பெண் காவலர் உயிரிழப்பு

போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த சந்துாரைச் சேர்ந்தவர் ரமாமணி, 34; மத்துார் போலீஸ் ஸ்டேஷனில், 2023 ஜூலை 1 முதல் முதன்மை காவலராக பணியாற்றினார். ஊத்தங்கரையில் நேற்று காலை நடந்த கவாத்து பயிற்சியில் பங்கேற்று, டி.வி.எஸ்., ஸ்கூட்டியில், தி.மலை - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றார். எதிரே, சுசூகி - 150 சிசி பைக்கில் அதிவேகமாக வந்த கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த அசோக், 35, ஸ்கூட்டி மீது மோதினார். இதில், ரமாமணி துாக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயமடைந்தார். மத்துார் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில் உயிரிழந்தார். காவலர் ரமாமணிக்கு கணவர் சீனிவாசன், 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. அவரது இறுதிச்சடங்கு இன்று காலை 11:00 மணிக்கு, அரசு மரியாதை யுடன் சந்துாரில் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ