உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மாரியம்மன் கோவில்களில் திருவிழா பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்

மாரியம்மன் கோவில்களில் திருவிழா பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்

தேன்கனிக்கோட்டை, தேன்கனிக்கோட்டை சந்தை மைதானத்திலுள்ள உத்தண்டி மாரியம்மன், அண்ணா நகர் சேலத்து மாரியம்மன், தேர்ப்பேட்டை மந்தை மாரியம்மன், ஜெய் தெரு ஓம் சக்தி மாரியம்மன், மேல்கோட்டை மாரியம்மன் கோவில்கள் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.சேலத்து மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு தீ மிதித்தல் நிகழ்ச்சி நடந்தது. சந்தை மைதானம் மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு அம்மனுக்கு கூழ் ஊற்றுதல், மாலை, 6:00 மணிக்கு தேவராஜ் ஏரியில் கங்கா பூஜை, இரவு, 8:30 மணிக்கு பூ மிதித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று காலை, 8:00 மணிக்கு, உத்தண்டி மாரியம்மன், சேலத்து மாரியம்மன், ஓம்சக்தி அம்மன், மேல்கோட்டை மாரியம்மன் உட்பட பல்வேறு அம்மன் கோவில்களில் இருந்து, மாவிளக்கு ஏந்தியும், வாய், முதுகில் அலகு குத்தி கிரேனில் தொங்கிய படியும், வாகனங்களை இழுத்த படியும், நகரின் முக்கிய வீதிகள் வழியாக, தேன்கனிக்கோட்டை தேர்ப்பேட்டை மந்தை மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். அங்கு பொங்கலிட்டு ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தி, சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி