உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மைதானத்தை சீரமைத்த முன்னாள் மாணவர்கள்

மைதானத்தை சீரமைத்த முன்னாள் மாணவர்கள்

தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி மாணவர்கள் விளையாடுவதற்காக உள்ள மைதானம் செடி, கொடிகள் வளர்ந்து, மேடு, பள்ளமாக காணப்பட்டது. அதனால், மாணவர்கள் மைதானத்தை பயன்படுத்த முடியவில்லை.இதையறிந்த அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து, பொக்லைன் வாகனம் உதவியுடன், செடி, கொடிகளை அகற்றி, மேடு, பள்ளமாக இருந்த மைதானத்தை சீரமைத்தனர். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்து, முன்னாள் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி