உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூர் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் துவக்கம்

ஓசூர் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் துவக்கம்

ஓசூர்:ஓசூர், ராம்நகரிலுள்ள பழமையான சுயம்பு கோட்டை மாரியம்மன் கோவில், மாவிளக்கு திருவிழா மற்றும் பல்லக்கு உற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவங்கினர். முன்னதாக, கிருஷ்ணகிரி, காங்., - எம்.பி., கோபிநாத், மாநகர மேயர் சத்யா ஆகியோர் முன்னிலையில், அம்மன் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, கொடிமரத்துடன் கோவிலை சுற்றி, மூன்று முறை திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து, கோவில் முன், கிடா வெட்டி சிறப்பு பூஜை செய்து, கொடியேற்றம் நடந்தது.காங்., மேற்கு மாவட்ட பொறுப்பாளர் நீலகண்டன், பா.ஜ., விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் அமர்பிரசாத்ரெட்டி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, பா.ஜ., முன்னாள் தலைவர் நாகராஜ், கவுன்சிலர்கள் மல்லிகா தேவராஜ், லட்சுமி ஹேமகுமார், முன்னாள் கவுன்சிலர் சரஸ்வதி நடராஜன் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி வரும், 12ம் தேதி அம்மனுக்கு பால் அபிஷேகம், 13ம் தேதி மாவிளக்கு திருவிழா, 14ம் தேதி, சிடி உற்சவம், பூமிதி திருவிழா, அம்மன் ஊர்வலம் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் பரம்பரை பூசாரி ஸ்ரீதர் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ