உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 68ம் ஆண்டில் கே.ஆர்.பி., அணை காங்., கட்சியினர் கொண்டாட்டம்

68ம் ஆண்டில் கே.ஆர்.பி., அணை காங்., கட்சியினர் கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி: தமிழக முதல்வராக இருந்த காமராஜர், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கில் அணையை கட்டி கடந்த, 1957 நவ., 10ல் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அதன்படி நேற்று, கே.ஆர்.பி., அணையின், 68வது ஆண்டு விழா, காங்., கட்சி சார்பில், காங்., முன்னாள் கிழக்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணி தலைமையில், கே.ஆர்.பி., அணை வளாகத்தில் கொண்டாடப்பட்டது. அகில இந்திய, காங்., முன்னாள் உறுப்பினர் முத்துக்குமார், நகர, காங்., தலைவர் தவமணி, தகவல் தொழில்நுட்ப மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், தொகுதி பொறுப்பாளர் திம்மப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், காமராஜரின் உருவபடத்திற்கு மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்தி, கே.ஆர்.பி., அணை நீரில் மலர் துாவி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ