உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கயல் பெனிபிட் சிட்ஸ் 6வது கிளை திறப்பு விழா

கயல் பெனிபிட் சிட்ஸ் 6வது கிளை திறப்பு விழா

தர்மபுரி:தர்மபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும், 'கயல் பெனிபிட் சிட்ஸ்' நிறுவனத்தின், 6வது கிளை, பொம்மிடியில் புதியதாக திறக்கப்பட்டது. 'கயல்' குழுமத்தின் நிர்வாக இயக்குனர் அறிவழகன் புதிய கிளையை திறந்து வைத்து, சேவைகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், மக்களின் ஆதரவோடு, தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு கிளைகள் மற்றும் இதர நிறுவனங்கள் மூலம் சிறப்பான சேவைகளை செய்து வருவதாகவும், மக்கள் தங்கள் ஆதரவுகளை தொடர்ந்து அளிக்குமாறும் கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில், 'கயல்' குழுமத்தின் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை