தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்
கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை அடுத்த உனிசெட்டியை சேர்ந்தவர் லட்சுமிபதி. இவர், தேன்கனிக்கோட்டை மின்வாரிய உதவி பொறியாளருக்கு அளித்த கோரிக்கை மனுவில், 'அனுமந்தபுரம் அடுத்த உனிசெட்டி கிராமத்தில், 3 மின் கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன.மழைக்காலத்தில் அந்த மின் கம்பங்கள் கீழே விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவை அமைந்துள்ள இடம் அய்யூர் காப்பு காட்டிற்கு அருகே என்பதால், அங்குள்ள விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. நாங்கள் கடந்த, 2 ஆண்டுகளாக மின்வாரியத்திற்கு மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.மேலும் பலமுறை மின்வாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்றும் நடவடிக்கை இல்லை. எனவே, அபாய நிலையிலுள்ள அந்த மின் கம்பங்கள் மற்றும் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.