உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி /  ¥ குளியலறைக்குள் புகுந்து பெண்ணை சீண்டியவர் கைது

 ¥ குளியலறைக்குள் புகுந்து பெண்ணை சீண்டியவர் கைது

சூளகிரி: ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர், 19 வயது இளம்பெண். ஒரு வாரத்திற்கு முன், தன் அண்ணன், அண்ணி ஆகியோருடன், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உல்லட்டி பகுதிக்கு வந்து, தனியார் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். நிறுவனத்தின் அருகே தங்கியிருந்தார். ஏப்., 8ம் தேதி இரவு, 9:30 மணிக்கு, வீட்டின் அருகே உள்ள குளியலறைக்கு இளம் பெண் சென்றார். அப்போது, அப்பகுதியில் மது அருந்தி கொண்டிருந்த, தியாகரசனப்பள்ளியை சேர்ந்த டிரைவர் நவீன், 27, என்பவர், குளியலறைக்குள் நுழைந்து, இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அக்கம்பக்கத்தினர் நவீ னை பிடித்து, தர்ம அடி கொடுத்து, போலீசில் ஒப்படைத்தனர். இளம் பெண் புகாரின்படி, சூளகிரி போலீசார் நேற்று முன்தினம் நவீனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ