உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தனியார் பஸ் மோதல் மெடிக்கல் ரெப் பலி

தனியார் பஸ் மோதல் மெடிக்கல் ரெப் பலி

தேன்கனிக்கோட்டை, :தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே கொக்கரப்பட்டியை சேர்ந்தவர் ஆதிமூலம் மகன் பிரவீன்குமார், 36. பி.பார்ம் பட்டதாரியான இவர், ஓசூரில் தங்கி தனியார் மருந்து நிறுவனத்தில், 'மெடிக்கல் ரெப்'பாக வேலை செய்தார். நேற்று முன்தினம் மாலை, பணி நிமித்தமாக தேன்கனிக்கோட்டை உள்ள மருத்துவமனைக்கு சென்று விட்டு, மீண்டும் ஓசூர் நோக்கி டி.வி.எஸ்., அப்பாச்சி பைக்கில் சென்றார். மாலை, 6:30 மணிக்கு, தேன்கனிக்கோட்டை - ஓசூர் சாலையில், பென்னங்கூரில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது, எதிரே வந்த தனியார் பஸ், பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பிரவீன்குமார், சம்பவ இடத்திலேயே பலியானார். தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ