உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் காளான் உற்பத்தியாளர் பயிற்சி துவக்கம்

பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் காளான் உற்பத்தியாளர் பயிற்சி துவக்கம்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில், தமிழ்நாடு வேளாண் பல்கலை நடத்தும், நான் முதல்வன், வெற்றி நிச்சயம் என்ற திட்டத்தில், காளான் உற்பத்தியாளர் பயிற்சிக்கான துவக்க விழா நடந்தது. பயிற்சியை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் (பொ) மற்றும் பதிவாளர் தமிழ்வேந்தன் இணைய வழியில் துவக்கி வைத்தார். பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவர், பேராசிரியர் அனீசா ராணி பேசுகையில், ''அனுபவம் வாய்ந்த விஞ்ஞானிகளைக் கொண்டு இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. காளான் விதை உற்பத்தி, காளான் வளர்ப்பு, அவற்றை தாக்கும் நோய்கள் மற்றும் பூச்சிகள், காளானில் மதிப்புக்கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் பற்றி பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், 35 வயதுக்கு உட்பட்ட பயனாளிகள் பங்கேற்கலாம்,'' என்றார். முன்னதாக உதவி பேராசிரியர் (பூச்சியியல் துறை) கோவிந்தன் வரவேற்றார். பூச்சியியல் துறை பேராசிரியர்கள் செந்தில்குமார், சசிகுமார் ஆகியோர் பயற்சி குறித்து விளக்கம் அளித்தனர். இப்பயிற்சி வரும் நவ., 15 வரை நடக்கிறது. பேராசிரியர் (வேளாண் விரிவாக்கம்) ஜான்சிராணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை