மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள்: சிவகங்கை
14-Jul-2025
ஓசூர்: ஓசூர், மலை மீதுள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவிலில், உலக நலனுக்காகவும், விவசாயம் செழிக்கவும், மக்கள் நோய், நொடியின்றி நீண்ட ஆயுள் பெறவும், 30ம் ஆண்டு மகா நவசண்டி யாகம் கடந்த, 1ம் தேதி காலை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் முதற்கால மகா நவசண்டி யாகம், இரவு, 7:00 மணிக்கு, 2ம் கால மகா நவசண்டி யாகம் நடந்தது.நேற்று காலை, 9:00 மணிக்கு, 3ம் கால மகா நவசண்டி யாகம், 11:00 மணிக்கு மகா சங்கல்பம், தம்பதி பூஜை, மதியம், 1:30 மணிக்கு மகா நவசண்டியாக விளக்கவுரை, 2:00 மணிக்கு கலசம் புறப்படுதல், 3:00 மணிக்கு, கணபதி, சிவன், அம்பாள், ஸ்ரீசக்கரம் கலசாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவு பெற்றது.
14-Jul-2025