தே.மு.தி.க., கொண்டாட்டம்
கிருஷ்ணகிரி: தி.மு.க., கூட்டணில், தே.மு.தி.க., முதன்முறை-யாக இணைந்துள்ளதை அக்கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.கிருஷ்ணகிரி, 5 ரோடு ரவுண்டானா அருகே, தே.மு.தி.க., கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், மற்றும் நகர, ஒன்றியம் சார்பில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்-கியும் கொண்டாடப்பட்டது. கிழக்கு மாவட்ட செயலாளர் சின்னராஜ், தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி நகர செயலாளர் ரவி, ஒன்றிய செயலாளர்கள் முருகன், வஜ்ரவேல், மாதேஷ், விஜய் வல்லரசு உள்ளிட்ட, தே.மு.தி.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.