உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மின்சாரம் தாக்கி பெயின்டர் பலி

மின்சாரம் தாக்கி பெயின்டர் பலி

ஓசூர், அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அகிபுர் ரஹ்மான், 27. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேகேப்பள்ளி எழில் நகரில் தங்கி, பெயின்டராக வேலை செய்து வந்தார். கடந்த, 8ம் தேதி மதியம், 12:30 மணிக்கு கோவிந்த அக்ரஹாரத்தில் உள்ள புதிய வீடு ஒன்றில் பெயின்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு உயிரிழந்தார். சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி