பசவேஸ்வர சுவாமி கோவில் திருவிழா
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே மஞ்சுகொண்டப்-பள்ளி பஞ்.,ல், காவிரியாற்றின் கரையில், பழமையான தெப்பக்-குழி பசவேஸ்வரா சுவாமி கோவில் உள்ளது. கால்நடைகளை காக்கும் தெய்வமாக பசவேஸ்வராவை மக்கள் வழிபட்டு வரு-கின்றனர். கிராமங்களில் வளர்த்து வரும் ஆடு, மாடுகளை நோய் நொடியில்லாமல் காக்க வேண்டும். நல்ல மழை பெய்து விவ-சாயம் செழிக்க வேண்டும் என வேண்டி, 3 நாட்கள் திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் பல்லக்கு உற்சவம், சுவாமிக்கு பூ அலங்காரம், குருசேத்திர நாடகம் நடந்தது. நேற்று சுவாமிக்கு மகா ருத்ராபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் அக்னி குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரி-சனம் செய்தனர்.