உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / விஜய்யை மக்கள் ஏற்பது 2026 தேர்தலில் தெரியும்

விஜய்யை மக்கள் ஏற்பது 2026 தேர்தலில் தெரியும்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, புதிய நீதிக்கட்சி நிறுவன தலைவர் சண்முகம், நிருபர்களிடம் கூறியதாவது: ஒரு சில மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வருகிறார்கள். முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் மதுவை ஒழிப்போம் எனக்கூறிய அரசு, கொஞ்சம், கொஞ்சமாவது மதுவை ஒழிக்க வேண்டும். நடிகர் விஜய் எனக்கு வேண்டிய நண்பர். அவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். மக்கள் ஏற்றுக்கொள்ளும் போது யாராலும் அதை தடுக்க முடியாது. மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களா என்பது, 2026 தேர்தலில் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ