மாணவியருக்கு தொல்லை ஆசிரியர் மீது போக்சோ
தளி, அரசு பள்ளி மாணவியருக்கு, பாலியல் தொல்லை கொடுத்த, பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர் மீது போலீசார் போக்சோவில் வழக்குப்பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த மதகொண்டப்பள்ளி அருகே, கல்கேரியை சேர்ந்தவர் மோகன்குமார், 45. மதகொண்டப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில், பகுதிநேர உடற்கல்வி ஆசிரியராக உள்ளார். இவர் கடந்த, 6 மாதத்தில், 6க்கும் மேற்பட்ட மாணவியருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக, மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் சென்றது.அதன்படி, மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினர், பள்ளியில் விசாரணை நடத்தினர். இதில், ஆசிரியர் மோகன்குமார் மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து, மாவட்ட குழந்தைகள் நன்னடத்தை அலுவலர் ரகுராம், 47, தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் நேற்று புகார் செய்தார். போலீசார், உடற்கல்வி ஆசிரியர் மோகன்குமார் மீது, போக்சோவில் வழக்குப்பதிந்து, தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.