உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.39.23 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பூஜை

ரூ.39.23 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பூஜை

ஓசூர்: சூளகிரி ஒன்றியம், செம்பரசனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில், 34.23 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி, அங்கொண்டப்பள்ளி கிராமத்தில் வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 5 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை மற்றும் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி துவக்க விழா நடந்தது. சென்னப்பள்ளி பஞ்., தலைவர் செல்வம், மாவட்ட கவுன்சிலர் பாபு வெங்கடாசலம் முன்னிலை வகித்தனர். வேப்பனஹள்ளி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., முனுசாமி தலைமை வகித்து, பூமிபூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் மாதேஷ், பாலசுப்பிரமணியன், சைலேஷ்கிருஷ்ணா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ