உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குடும்பத்துடன் பூசாரி தற்கொலை முயற்சி

குடும்பத்துடன் பூசாரி தற்கொலை முயற்சி

ஊத்தங்கரை ஊத்தங்கரை அடுத்த, சிங்காரப்பேட்டை பி.புதுார் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள், 40. இவர் பெருமாள் கோவில் பூசாரியாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மிதுலா, 38. இவர்களுக்கு, 12 மற்றும் 9 வயதில் இரு மகன்கள். இவர்கள் தனியார் பள்ளியில் முறையே, 7 மற்றும் 5ம் வகுப்பு படிக்கின்றனர். கோவில் அறங்காவலர் குழுவினர், பூசாரி பெருமாளை, ஒழுங்கு நடவடிக்கை காரணமாக பணியில் இருந்து நீக்குவதாக கூறி, நேற்று நோட்டீஸ் அனுப்பினர். இதனால் மனஉளைச்சலில் பெருமாள் மனைவி மற்றும் 2 மகன்களுடன் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு, சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஊத்தங்கரை டி.எஸ்.பி., சீனிவாசன், இன்ஸ்பெக்டர் முருகன் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ