பிரதம மந்திரியின் தன் - தான்யா வேளாண் திட்டம் துவக்கம்
கிருஷ்ணகிரி, : கிருஷ்ணகிரி அடுத்த எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மையத்தில், பிரதம மந்திரியின் தன்-தான்யா வேளாண் திட்ட துவக்க காணொளி நிகழ்ச்சி மற்றும் விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.இதில் விவசாயிகளுக்கு, 42,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான திட்டங்களான, பிரதம மந்திரியின் தன்-தான்யா வேளாண் திட்டம் மற்றும் பருப்பு வகைகள் தன்னிறைவு இயக்கம் தொடக்கம், வேளாண் உட்கட்டமைப்பு நிதியம், கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் உணவு பதப்படுத்துதல் துறையின், 1,100க்கும் மேற்பட்ட திட்டங்களின் துவக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டுதல் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் சுந்தர்ராஜ் தலைமை வகித்து, மத்திய அரசின் திட்டங்களை விளக்கி கூறினார். வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுனர்கள் குணசேகர் (மண்ணியல்), இயற்கை பண்ணைய சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் உயிர் உரங்களின் பயன்பாடுகள் மற்றும் மண் பரிசோதனை செய்வதன் முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்தினார். வேளாண் விரிவாக்க தொழில்நுட்ப வல்லுனர் செந்தில்குமார், கால்நடை அறிவியல் தொழில்நுட்ப வல்லுனர் டாக்டர் ரமேஷ் ஆகியோர் பங்கேற்றனர். தொழில்நுட்ப வல்லுனர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. இதில், 400 விவசாயிகள் பங்கேற்றனர்.