தலைமையாசிரியர் மாயம்
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கொத்தகொண்டப்பள்ளி அருகே திருப்பதி வேலி லே அவுட்டை சேர்ந்தவர் விக்டர் அருள்ராஜ், 73. ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்; கடந்த, 24ம் தேதி மாலை, 5:00 மணிக்கு ஓசூர் பழைய மத்திகிரி அருகே ராயல் ஆற்காடு லே அவுட்டில் உள்ள தனது மகன் ஜெனு, 36, வீட்டிலிருந்து தன் வீட்டிற்கு சென்றார். ஆனால், வீட்டை சென்றடையாமல் மாயமானார். அவரது மகன் புகார்படி, மத்திகிரி போலீசார் தேடி வருகின்றனர்.