உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரியில் மழை

கிருஷ்ணகிரியில் மழை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கோடையை மிஞ்சும் அளவுக்கு வெயில் வாட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதேபோல், விவசாயிகளும் பயிர்களை காப்பாற்ற, தண்ணீரை விலைக்கு வாங்கி வயலுக்கு பாய்ச்சி வருகின்றனர். கிருஷ்ணகிரி நகரில் நேற்று காலை வழக்கம்போல் வெயில் சுட்டெரித்தது. மாலையில் வானம் இருண்டு காணப்பட்ட நிலையில், 5:45 மணிக்கு, இடி மின்னலுடன் லேசான மழை பெய்தது. இதனால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியதால், பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இதேபோல், காவேரிப்பட்டணம், பர்கூர் உள்-ளிட்ட மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி