ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில், 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் சுகுமார் தலைமை வகித்தார். செயலாளர் செந்தில், போராட்டக்குழுத் தலைவர் விக்ரமன், துணைத் தலை-வர்கள் சிவா, மூர்த்தி, இணை செயலாளர்கள் சந்திரன், தமிழ்-செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் நாக-ராஜன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில், ரேஷன் கடைகளில் தற்போது புளூடூத் மூலம் மின்னணு எடை தராசு இணைக்கப்பட்டு விற்பனை மேற்கொள்-ளும்போது, ஒரு கார்டுக்கு பொருள் வினியோகம் செய்ய குறைந்-தபட்சம், 10 நிமிடம் ஆகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு, 50 ரேஷன் கார்டுகளுக்கு மட்டுமே பொருள் வினியோகம் செய்ய முடிகிறது. இதனால் பொதுமக்களுக்கும், பணியாளர்களுக்கும் மோதல்போக்கு ஏற்படுகிறது.எனவே, புளூடூத் மூலம் விற்பனை மேற்கொள்வதை முற்றிலும் நீக்க வேண்டும். நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கிலிருந்து முதன்மை சங்கங்களுக்கு நகர்வு செய்யும் பொருட்களில், அரிசி 2 கிலோ முதல், 5 கிலோ வரை மற்றும் சர்க்கரை, துவரம்பருப்பு, கோதுமை ஆகிய பொருட்கள், ஒரு கிலோ முதல், 2 கிலோ வரை எடை குறைவாக வருகிறது.எனவே அனைத்து பொருட்களும் சரியான எடையில் விற்பனை முனையத்தில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட, 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.