தட்டச்சு இயந்திரம் மூலம் தேர்வு நடத்த கோரிக்கை
கிருஷ்ணகிரி, தட்டச்சு இயந்திரம் மூலமே தொடர்ந்து தேர்வு நடத்த வேண்டுமென, கிருஷ்ணகிரி மாவட்ட வணிகவியல் பள்ளிகள் சங்கத்தலைவர் சையத் நாசர் மற்றும் செயலாளர் ரமேஷ் சுந்தர் தலைமையில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். அதில், அவர்கள் தெரிவித்துள்ளதாவது:தொழில்நுட்ப கல்வி இயக்கத்தினால், ஆண்டுதோறும் பிப்., மற்றும் ஆக., பருவங்களில் அரசு தட்டச்சு தேர்வுகள் நடக்கின்றன. 2027 முதல் தட்டச்சு தேர்வு, கணினியில் மட்டுமே நடத்தப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையை ரத்து செய்து, 100 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளவாறு, தட்டச்சு தேர்வை, தட்டச்சு இயந்திரம் மூலமாகவே நடத்த வேண்டும், என்ற கோரிக்கையை, மறு பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.