உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வீடு புகுந்து திருட முயன்றவருக்கு காப்பு

வீடு புகுந்து திருட முயன்றவருக்கு காப்பு

ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, அலேசீபம் அருகே கொத்துாரை சேர்ந்த ஜெகதேஷ், 34. விவசாயி; நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு, ஜெகதேஷ் வெளியே சென்றிருந்த நிலையில், அவரது தாய் சாரதா, 58, மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டிற்குள் சத்தமின்றி நுழைந்த வாலிபர் ஒருவர், பீரோவை திறந்து பொருட்களை திருட முயன்றார். சத்தம் கேட்டு பீரோ இருந்த அறைக்குள் சாரதா சென்று பார்த்தார். அப்போது அவரை, ஒரு வாலிபர் தள்ளி விட்டு விட்டு தப்பியோடினார். சாரதா சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், தப்பியோடிய வாலிபரை பிடித்து, தர்ம அடி கொடுத்து, ராயக்கோட்டை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், அலேசீபம் பகுதியை சேர்ந்த திம்மராஜ், 23, என தெரிந்தது. ஜெகதேஷ் புகார் படி போலீசார், திம்மராஜை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ