உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி தீர்மானம்

ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி தீர்மானம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் நடன நாட்டியலயா கலை குழுவினரின், இணைந்த கைகள் சங்க மாநில குடும்ப விழா மற்றும் திருவிழா நடந்தது. மாநில பொதுச்செயலாளர் ராசு தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரன் வர-வேற்றார். கூட்டத்தில், நாடக மற்றும் ஆடல், பாடல் கலைக்குழு-வினருக்கு நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது.தமிழகம் முழுவதும் இரவு, 10:00 மணி வரை நடன நிகழ்ச்சி-களை தடையின்றி நடத்த அனுமதி வழங்க வேண்டும். முந்தைய காலங்களை போல, நடன நிகழ்ச்சிகளுக்கு நீதிமன்றம் மூலம் உரிய அனுமதி வழங்க, தமிழக அரசின் நலவாரியத்தில் கலைக்-குழு சங்க உறுப்பினர்களை சேர்க்க வேண்டும், என்பன உள்-ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தமிழகத்தில் பல்வேறு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய அண்டை மாநில நிர்-வாகிகளும், கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை