சென்றாயன் மலையை சுற்றி தார்சாலை அமைக்க தீர்மானம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட திட்டக்குழு கூட்டம், திட்டக்குழு தலைவரும், மாவட்ட ஊராட்சி குழு தலைவருமான மணிமேகலை தலைமையில்நடந்தது. மாவட்ட கலெக்டர் சரயு முன்னிலை வகித்தார்.ஓசூர் சர்வதேச மலர் ஏல மையம் செயல்பாடுகள், அத்திமுகம் கிராமத்தில் சூளகிரி முதல் பேரிகை சாலையோர கடை ஆக்கிரமிப்பு அகற்றுதல், சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வருதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மத்தூர் ஊராட்சி ஒன்றியம் சாலமரத்துப்பட்டி ஊராட்சியல் சென்றாயன் மலையை சுற்றி தார்சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், ஆனந்தூர் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற கட்டடம் அமைக்க கோருதல் என்பன உள்ளிட்ட, 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மகாதேவன், மாவட்ட திட்ட பிரிவு அலுவலர் ஆப்தாப்பேகம், குழு உறுப்பினர்கள், ஒன்றிய குழு தலைவர்கள், மற்றும் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.