மேலும் செய்திகள்
சாலைப்பணியாளர்கள் தீப்பந்தம் ஏந்தி தர்ணா
30-Jul-2025
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முகமூடி அணிந்து, நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கோட்ட தலைவர் திம்மராஜ் தலைமை வகித்தார். கோட்ட துணைத்தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். கோட்ட செயலாளர் ராஜமாணிக்கம், மாநில துணைத்தலைவர் தினேஷ், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன் ஆகியோர் பேசினர். கோட்ட பொருளாளர் சுபாஷ் சந்திர போஸ் நன்றி கூறினார்.ஆர்ப்பாட்டத்தில், தொழிற்சங்க விரோத போக்கு, அதிகார துஷ்பிரயோகம் செய்யும் அரசை கண்டிக்கின்றோம். சாலைப்பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி நிறைவேற்றக்கோரி, சென்னையில் கடந்த, 12ல் நடந்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற சாலைப்பணியாளர்களை கைது செய்து கொடுமைப்படுத்திய, அரக்க குணம் கொண்ட தமிழக அரசையும், போலீசாரையும் வன்மையாக கண்டிக்கிறோம் என, அரக்க முகமூடி அணிந்து, கண்டன கோஷங்களை எழுப்பினர்.
30-Jul-2025