உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.2.84 லட்சம் பறிமுதல்

ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.2.84 லட்சம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் பறக்கும் படையினர் திருவண்ணாமலை மேம்பாலம் அருகில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வந்த கர்நாடக மாநிலம் சத்துாரை சேர்ந்த சின்ன பசய்யா என்பவரின் காரை சோதனை செய்த போது உரிய ஆவணமின்றி, 2 லட்சம் ரூபாய் எடுத்து சென்றது தெரிந்தது. பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், கிருஷ்ணகிரி தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.*வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதி தேர்தல் பறக்கும் படை-யினர், குந்தாரப்பள்ளி - வேப்பனஹள்ளி சாலையில் உள்ள அத்-திகுண்டா சோதனைச்சாவடி அருகே, நேற்று காலை வாகன சோதனை செய்தனர்.அப்போது அவ்வழியாக வந்த கியா காரை நிறுத்தி சோதனை செய்தபோது, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவரிடம், 84,000 ரூபாய் இருந்தது.தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், அப்ப-ணத்திற்கு உரிய ஆவணங்களை காட்டுமாறு பறக்கும் படையினர் கேட்டனர். அவரிடம் ஆவணம் இல்லாததால், அப்பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், சூளகிரி தாலுகா அலுவல-கத்தில், வேப்பனஹள்ளி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கீதாராணியிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !