உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / செங்கோட்டையன் சென்னை பயணம் கோபி அருகே பண்ணை வீடு வெறிச்

செங்கோட்டையன் சென்னை பயணம் கோபி அருகே பண்ணை வீடு வெறிச்

கோபி: கோவை மாவட்டம் அன்னுாரில், அத்திக்கடவு-அவிநாசி திட்-டத்தில், அ.தி.மு.க., பொது செயலர் இ.பி.எஸ்.,சுக்கு நடந்த பாராட்டு விழாவில், கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன் பங்-கேற்காதது, அக்கட்சி அளவில் மட்டுமின்றி மாநில அளவில் கடந்த சில நாட்களாக விவகாரத்தையும், சர்ச்சையையும் ஏற்ப-டுத்தி வருகிறது. இரு தரப்பிலும் விளக்கம் அளித்தாலும், தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தரப்பில் ஒருவித கொந்தளிப்பு இருக்கத்தான் செய்கி-றது. அதேசமயம் கோபி அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டுக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாது-காப்பு அளிக்கப்பட்டது. இதுவும் அக்கட்சியினர் மத்தியில் எரி-கிற தீயில் எண்ணெயை ஊற்றுவது போலானது. இந்நிலையில் தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்த மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்-கிணைப்பு குழு கூட்டத்தில் பங்கேற்க, செங்கோட்டையன் புறப்-பட்டு சென்றார். இதனால் கடந்த சில நாட்களாக பரபரப்பாக இருந்த, அவரது பண்ணை வீடு நேற்று வெறிச்சோடியது. அதேச-மயம் போலீஸ் பாதுகாப்பு தொடர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி