போச்சம்பள்ளி சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு தர்ம-புரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார் உள்ளிட்ட மாவட்டங்களிலி-ருந்து வியாபாரிகள், விவசாயிகள், 1,500க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் நாட்டு கோழிகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.கடந்த செப்., 17-ல் புரட்டாசி மாதம் பிறந்தது. இந்நிலையில் வியாபாரிகள் நேற்று ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்-தனர். ஆனால் வாரச்சந்தையில், 10,000 ரூபாய்க்கு விற்க வேண்-டிய ஆடு, 8,000 ரூபாய்க்கும், 15,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டிய ஆடு, 13,000 ரூபாய்க்கும் விற்பனையானது. இதனால், 1,000க்கும் குறைவான ஆடுகள் விற்பனை ஆன நிலையில், விற்பனை ஆகாத, 500க்கும் மேற்பட்ட ஆடுகளுடன் வியாபாரிகள் திரும்பிச் சென்றனர். இதனால் போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தமாக இருந்தது.