உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சிறப்பு நற்கருணை ஆராதனை பவனி

சிறப்பு நற்கருணை ஆராதனை பவனி

கிருஷ்ணகிரி; உலக அமைதியும், சமாதானமும் வேண்டி, சிறப்பு நற்கருணை ஆராதனை பவனி நடந்தது.கிருஷ்ணகிரி சாந்தி நகரில் அமைந்துள்ள, மாதா இருதய சபை கன்னியர் மடத்தில் முதல் மேடை அமைத்து, நற்கருணை ஆராதனை மற்றும் ஆசீர்-வாதம் நடந்தது. பின்னர், நற்கருணை நாதரை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தின் மூலம் ஊர்வல-மாக, புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி வளா-கத்தில் அமைக்கப்பட்டிருந்த இரண்டாவது மேடைக்கு கொண்டு வந்து, அங்கும் நற்கருணை ஆராதனையும், ஆசீர்வாதமும் வழங்கப்பட்டது.தொடர்ந்து, கிருஷ்ணகிரி துாய பாத்திமா அன்னை திருத்தலத்தில், பங்குத்தந்தை அருள்ராஜ், உலக நன்மைக்காகவும், சமாதானத்-திற்காகவும், சிறப்பு திருப்பலியும், நற்கருணை ஆராதனையும் செய்து, இறைமக்க-ளுக்கு இறுதி ஆசீர்வாதம் வழங்கினார். இந்த சிறப்பு நற்கருணை பவனி மற்றும் ஆராத-னையில், கிருஷ்ணகிரி மற்றும் அதனைச்சுற்றி-யுள்ள பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ மக்கள் திர-ளாக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை