உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தமிழக முதல்வர் ஸ்டாலின் 72வது பிறந்த நாள் நல உதவி

தமிழக முதல்வர் ஸ்டாலின் 72வது பிறந்த நாள் நல உதவி

ஊத்தங்கரை: ஊத்தங்கரையில், தி.மு.க., பொறியாளர் அணி சார்பில், தமிழக முதல்வர் ஸ்டாலினின், 72வது பிறந்தநாள் விழா பொதுக்-கூட்டம், நல உதவி வழங்கும் விழா நேற்று முன்தினம் இரவு நடந்தது.தி.மு.க., மாவட்ட பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் காந்தி தலைமை வகித்தார்.தி.மு.க., கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் எம்.எல்.ஏ.,வுமான மதியழகன், பொறியாளர் அணி மாநில செய-லாளர் கருணா ஆகியோர், மக்களுக்கு தையல் இயந்திரங்கள், சலவை பெட்டிகள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதில், ஊத்தங்கரை தெற்கு ஒன்றிய செயலாளர் ரஜினி செல்வம், வடக்கு குமரேசன், மத்திய எக்கூர் செல்வம், மாநில மகளிர் ஆணைய குழு உறுப்பினர் டாக்டர் மாலதி, நகர செயலாளர் பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ