டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 2வது நாளாக ஊழியர்கள் போராட்டம்
ராயக்கோட்டை, ராயக்கோட்டை அடுத்த வன்னியபுரம் அருகே இயங்கி வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில், தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம், 900 தொழிலாளர்கள் பணியில் உள்ளனர். இவர்களுக்கு வழங்கும், 15,000 மாத ஊதியத்தை, 23,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். பஸ்சில் வேலைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒப்பந்த தொழிலாளர்கள், 100க்கும் மேற்பட்டோர், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன வளாகத்தில் உள்ள ஒப்பந்த நிறுவனம் முன், நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, நேற்று ஒப்பந்த நிறுவனத்தின் உயரதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் ஒப்பந்த தொழிலாளர்கள், 500க்கும் மேற்பட்டோர் நேற்று காலை மீண்டும் பணியை புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் ராயக்கோட்டை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மாலை, 5:00 மணிக்கு மேல், தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.