ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி நிறைவு
கெலமங்கலம்; கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுவின் பயிற்சி மற்றும் கற்றல் நிறுவன பங்களிப்புடன், ஆசிரியர் மேம்-பாட்டு பயிற்சி ஒரு வாரம் நடந்தது. நுண்கலை நீர்களிமம் மற்றும் செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு தலைமை வகித்தார். விரிவுரையாளர் சிவசங்கரி வர-வேற்றார். ஜோலார்பேட்டை அரசு பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் பூங்கோதை பங்கேற்று, பயிற்சியின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார். மேலும், பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். ஒருங்கிணைப்-பாளர் சித்ரா, துணை முதல்வர் சாந்தி மீனா உட்-பட பலர் பங்கேற்றனர்.