உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பெண் தொழிலாளியை தாக்கிய இருவர் கைது

பெண் தொழிலாளியை தாக்கிய இருவர் கைது

பேரிகை, கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அடுத்த முதுகுறுக்கி அருகே மீனன்தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சு மனைவி சித்ரா, 27. கூலித்தொழிலாளி; கடந்த, 5ம் தேதி அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஊரின் அருகே, கிரிக்கெட் விளையாடி விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சித்ராவின் சகோதரி கணவர் சதீஷ், 31, என்பவர், 16 வயது சிறுவனின் கிரிக்கெட்பேட்டை உடைத்தார்.இது தொடர்பாக ஒரு தரப்பினர், சதீஷிடம் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவரை கையால் தாக்கினர். இதை பார்த்த சித்ரா, தன் சகோதரியின் கணவரை எவ்வாறு தாக்கலாம் என கேள்வி எழுப்பியதால், அவரையும் தாக்கி மிரட்டல் விடுத்தனர்.இது தொடர்பாக, சித்ரா பேரிகை போலீசில் கொடுத்த புகார் படி, மீனன்தொட்டி கிராமத்தை சேர்ந்த முருகேஷ், 40, கோவிந்தப்பா, 38, பாலா, 35, பிரசாந்த், 25, ஆகிய, 4 பேர் மீது வழக்குப்பதிந்த பேரிகை போலீசார், கோவிந்தப்பா, பாலாவை கைது செய்து பின் ஜாமினில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை