உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தவறி விழுந்த கட்டட தொழிலாளர்கள் இருவர் பலி

தவறி விழுந்த கட்டட தொழிலாளர்கள் இருவர் பலி

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த கே.பூசாரிப்பட்டியை சேர்ந்தவர் செல்வி, 34, கட்டட தொழிலாளி. நேற்று முன்தினம் மாலை, கிருஷ்ணகிரியில், சென்னை சாலையில் கட்டுமான பணி ஒன்றில் ஈடுபட்டிருந்தார். அப்போது, செல்வி, 2வது தளத்தில் இருந்து தவறி விழுந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே செல்வி இறந்தார். கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.அதேபோல, தர்மபுரி மாவட்டம், கவுண்டன் கொட்டாயை சேர்ந்தவர் முனிராஜ், 61. இவர் ஓசூர், திப்பாளம் பகுதியில் தங்கி கட்டட வேலை செய்து கொண்டிருந்தார். கடந்த, 27 இரவு அவர் முதல் தளத்தில் இருந்து தவறி விழுந்து இறந்தார். இது குறித்து ஓசூர் ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை