மேலும் செய்திகள்
தனியார் மருத்துவமனை டாக்டர் மாரடைப்பால் சாவு
16-Sep-2025
கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் அடுத்த எம்.,சவுளுரை சேர்ந்த, 8ம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஹரிசிவா, 13. நேற்று முன்தினம், வீட்டின் முதல் மாடியில், தன் அக்காவுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.அப்போது, முதல் மாடியிலிருந்து கீழே குதிக்க போவதாக, விளையாட்டாக கூறியுள்ளார். அதை, தன் அக்கா, பெற்றோரிடம் கூறிவிடுவார் என்ற பயத்தில் வீட்டிலிருந்து வெளியில் சென்ற ஹரிசிவா மீண்டும் வீடு திரும்பவில்லை. மாணவரின் பெற்றோர் புகார் படி, காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர். ஊத்தங்கரை அடுத்த அப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ரகுநாதன், 44, சலவை கடை நடத்தி வந்தார். கடந்த, 22ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாயமானார். அவரது குடும்பத்தினர் அளித்த புகார் படி, ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
16-Sep-2025