உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலைமறியல் போராட்டம்

குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலைமறியல் போராட்டம்

பாகலுார்;ஓசூர் அருகே, குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பாகலுார் அருகே பெலத்துார் பகுதியில், 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதிக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், அப்பகுதியில் உள்ள நீர்நிலை மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து, தண்ணீரை எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர்.இக்கிராமத்தில் இருந்த போர்வெல் வறண்ட நிலையில், டிராக்டர் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. ஆனால், முறையாக மக்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை. புதிய போர்வெல்லிற்கு, மின் இணைப்பு கொடுக்காமல் அலட்சியமாக இருப்பதால், குடிநீர் பிரச்னை தலை துாக்கியுள்ள கூறி, 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள், பாகலுார் - பெலத்துார் சாலையில் நேற்று மதியம், 12:20 முதல், 12:40 மணி வரை, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பாகலுார் இன்ஸ்பெக்டர் யுவராஜ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, டிராக்டர் மூலம் சீராக குடிநீர் வழங்கப்படும் என உறுதியளித்தனர். அப்போது, புதிய போர்வெல்லிற்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர். அதை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டதால் போராட்டம் கைவிடப்பட்டது. திடீர் மறியல் காரணமாக, அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !