உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குறவர் இன மக்களுக்கு நலவாரிய அடையாள அட்டை

குறவர் இன மக்களுக்கு நலவாரிய அடையாள அட்டை

கிருஷ்ணகிரி, டிச. 24-கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது. இதில், பல்வேறு கோரிக்கைகள் குறித்து, 437 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.தொடர்ந்து, கிருஷ்ணகிரி ஆவின் சார்பில், மாவட்ட அளவில் சிறந்த பால் உற்பத்தியாளர்கள், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர்கள் மற்றும் தொகுப்பு பால் குளிர்விப்பு மைய செயலாளர்கள், 9 பேருக்கு ஊக்கத்தொகையாக, 54,000 ரூபாய்க்கான காசோலை, தொழிலாளர் நலவாரியம் மூலம் பதிவு பெற்ற, 3 உறுப்பினர்களின் வாரிசுதாரர்களுக்கு நலத்திட்ட உதவியாக தலா, 50,000 ரூபாய் வீதம் மொத்தம், 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான காசோலைகளை, மாவட்ட கலெக்டர் சரயு வழங்கினார்.தொடர்ந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், சூளகிரி வட்டத்தை சேர்ந்த, 100 நரிக்குறவர் இன மக்களுக்கு நலவாரிய அட்டைகளை வழங்கினார். டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பன்னீர்செல்வம், மற்றும் அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி