ரயில் மோதி தொழிலாளி பலி
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் - கெலமங்கலம் ஸ்டேஷன்களுக்கு இடையே ரயில்வே தண்டவாளத்தில், 46 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடப்பதை, கோவை - பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜின் பைலட் பார்த்து, ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் வினோத்குமார் சிங்கிற்கு நேற்று தகவல் தெரிவித்தார். அவரது புகார் படி, ஓசூர் ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்தனர்.இதில் இறந்து கிடந்தவர், ஓசூர் அருகே, பைரமங்கலத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி கிருஷ்ணப்பா, 46, என்பதும், ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, அவ்வழியாக சென்ற ஏதோ ஒரு ரயில் மோதி தலை நசுங்கி பலியானதும் தெரிந்தது. ஓசூர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.