வீரபத்ர சுவாமி கோவில் திருவிழாவில் வழிபாடு
கிருஷ்ணகிரி, பர்கூர் ஒன்றியம் காரகுப்பம் பஞ்., கொல்லப்பள்ளி அடுத்த பையன் கொட்டாய் கிராமத்திலுள்ள வீரபத்ர சுவாமி கோவில் திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை, வீரபத்திர சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் பூஜை நடந்தது. இரவு முழுவதும் குறும்பர் இன மக்கள் தங்கள் பாரம்பரிய இசைக்கருவிகளான தப்பட்டை, பாங்கா ஆகியவற்றை இசைத்து, பஜனை பாடல் பாடினர். நேற்று அதிகாலை, ஏராளமான பக்தர்கள் வீரபத்திர சுவாமி முன் அமர்ந்து, தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.