உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மக்களிடம் யோகா விழிப்புணர்வு துாத்துக்குடி வரை நடைபயணம்

மக்களிடம் யோகா விழிப்புணர்வு துாத்துக்குடி வரை நடைபயணம்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த பெரியதக்கேப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடேசன், 38. யோகா ஆசிரியர். இவர், யோகா குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த, கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி வழியாக, துாத்துக்குடி வரை நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டு நேற்று காலை, 6:00 மணிக்கு, கிருஷ்ணகிரி ரவுண்டானாவில் இருந்து தன் பயணத்தை, யோகாவுடன் துவங்கினார். இவரை, பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் கவியரசு மற்றும் கட்சி நிர்வாகிகள், யோகா மாணவர்கள் வழியனுப்பி வைத்தனர்.இது குறித்து வெங்கடேசன் கூறுகையில், ''நடைபயணத்தில் யோகா செய்தபடியும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியவாறும், நடைபயணம் மேற்கொண்டுள்ளேன். வழியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் யோகா செய்து காட்டி, யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளேன். ஒரு நாளைக்கு, 50 முதல், 100 கி.மீ., தொலைவு நடக்க திட்டமிட்டுள்ளேன். பயணத்தின் முடிவில், அடுத்த மாதம், 27 மற்றும், 28ல் துாத்துக்குடிக்கு வரும், பிரதமர் மோடியை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை