உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கந்தன் திருக்கல்யாணம் காண நிழல் பந்தல், அகன்ற திரைகள் குன்றத்தில் கோலாகலம்

கந்தன் திருக்கல்யாணம் காண நிழல் பந்தல், அகன்ற திரைகள் குன்றத்தில் கோலாகலம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் மார்ச் 18ல் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று சன்னதி தெருவில் நிழல் பந்தல் அமைத்து, பெரிய திரைகள் மூலம் திருக்கல்யாணத்தைக் காண வசதி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.கோயிலுக்குள் திருவாட்சி மண்டபத்தின் ஆறுகால் பீடத்தில் சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை திருக்கல்யாணம் ஆண்டுதோறும் நடக்கிறது. மண்டபத்திற்குள் ஆயிரத்துக்கும் குறைவான பக்தர்கள் மட்டுமே அமர்ந்து திருக்கல்யாணத்தை காண முடியும். வி.ஐ.பி.,க்கள், அரசியல்வாதிகள், ரூ.100டிக்கெட் எடுப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.பக்தர்கள் கோயில் ஆஸ்தான மண்டபத்தில் அமைக்கப்படும் 'டிவி' மூலம் தரிசனம் செய்வர். அங்கும் இடமில்லாதவர்கள் கோயிலின் முன்பு வெயிலில் காத்து கிடப்பர். ஏராளமானோர் திருக்கல்யாணத்தை தரிசிக்க முடியாமல் திரும்புவர்.அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா கூறியதாவது: திருக்கல்யாணத்தைக் காண சன்னதி தெருவில் (சுவாமி புறப்பாடுக்கு இடையூறு இன்றி) உயரமாக பந்தல் அமைத்து, பல இடங்களில் 'டிவி' அமைத்து திருக்கல்யாணத்தை நேரடியாக ஒளிபரப்பு செய்யவும், பக்தர்கள் திருக்கல்யாணத்தை தரிசித்து, மனநிறைவுடன் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்படுகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை