பல்கலை புதிய சிண்டிகேட் உறுப்பினர்கள் நியமனம்
மதுரை : மதுரை காமராஜ் பல்கலைக்கு புதிய சிண்டிகேட் உறுப்பினர்களாக மதுரைக் கல்லுாரி பொருளியல் துறை பேராசிரியர் எஸ். தீனதயாளன், சிவகங்கை ராஜா துரைசிங்கம் அரசு கலைக் கல்லுாரி வணிகவியல் துறைப் பேராசிரியர் கேத்தராஜ் ஆகியோரை கவர்னர் ரவி நியமித்துள்ளார்.இப்பல்கலை கவர்னர் பிரதிநிதி சிண்டிகேட் உறுப்பினர்களான டாக்டர் ஆர்.லட்சுமிபதி, விஞ்ஞானி வாசுதேவன் ஆகியோர் பதவிக்காலம் செப். 9ல் முடிகிறது. இவர்களுக்கு பதில் தீனதயாளன், கேத்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பதவிக் காலம் 3 ஆண்டுகள். பேராசிரியர் தீனதயாளன் 2018 முதல் 2021 வரை ஏற்கெனவே இப்பதவி வகித்தார். தற்போது இரண்டாவது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.